About

 

.
.

Scroll down for English Version.

.

          ஆழ்நிலை தியானத்தின் மூலம், இயற்கையை விஞ்சிய சக்தியை சித்த்ர்கள் பெற்றிருந்தனர் என்பது வெள்ளிடைமலை, வேளையையும், வெளியேயும் தமது கட்டுக்குள் அடக்குவதன் மூலம் தம் உருவையும் தோற்றத்தையும் வேண்டியவண்ணம் மாற்றக் கூடியது இந்த சக்தி.

          சித்தர் வரிசையில் பதினெண்மர் முன்னோடிகளாக திகழ்கின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் மிகமிக சிறப்புற்றவர். மிகச்சிறந்த பாடல்களையும், கவிதைகளையும் இயற்றியுள்ளனர். இவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

          சமாதியான பின்னரும் அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுதான் ஜீவசமாதி. வாழ்வின் முடிவை தாமே தேர்ந்தெடுக்கும் வல்லமை பெற்றவர்கள் சித்தர்கள். சமாதியடையும் நேரம், இடம் அனைத்தும் அவர்களுக்கு முன்னரே தெரியும். சமாதியடைந்த பின்னும், அந்த உடம்பிலும் அதைச்சுற்றியுள்ள இடத்திலும் ஜீவசக்தி நிறைந்திருந்து அங்கு வருவோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

          ஜீவசமாதியை சுற்றிலும் உந்துசக்தி நிறைந்திருப்பதை நானே உணர்ந்து இருக்கிறேன். வாழ்க்கை என்பது என்ன, ஏன் வாழவேண்டும்? எப்படி வாழவேண்டும் என்றெல்லாம் நமக்கு போதனை செய்யும் குருக்கள் இந்த சித்தர்கள்.

          வாழுகின்ற சித்தர்களைத் தரிசிப்பதோ, அவர்களது ஆசிகளைப் பெறுவதோ அவ்வளவு எளிதல்ல. பார்த்தவுடன் புரிந்து கொள்ளும்படியான தோற்றமுடையவர்கள் அல்ல அவர்கள். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற நோக்கோடு நீங்கள் வாழ்ந்தால் சித்தர்களின் தரிசனமும் ஆசிகளும் உங்களுக்குக் கிட்டும்.

          சித்தர்களையும், ஜீவசமாதிகளையும் அறிந்து கொள்வதற்கு உதவும் சில சிறப்பான குறிப்புகளை தெரிந்து தெளிவு பெறுங்கள். டிரஸ்ட் எனும் குழுக்கள் சில ஜீவசமாதிகளை தங்கள் பார்வையில் பராமரித்து வருகின்றன. சில தனி நபர்களும் கண்காணித்து வருவதுண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி மக்கள் இங்கே சென்று வணங்கலாம் தியானம் செய்யலாம்.

          சில சமாதிகள் சரியாக பராமரிக்கப்படாததால் அழிந்துவிட்டன. தனியாருக்கு சொந்தமான இடங்களில் சில சமாதிகள் உள்ளன. அங்கேயே சமாதி இருப்பதையே அவர்கள் யாருக்கும் சொல்வதில்லை.

          சித்தர்களைப்பற்றியும், அவர்களின் ஜீவசமாதிகளை பற்றியும் சரியான அளவில் வெளியில் யாருக்கும் தெளிவு தெரியவில்லையோ என்று ஐயனும் வண்ணம்தான் தற்கால நிலை உள்ளது. இறையருள்தான் பொதுவான தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

.
.

          Sidhdhars are said to have Supernatural powers achieved through meditation. These powers spanned from controlling time and space, transforming the body to desired shape / size. A classical definition given by Sidhdhar Thirumoolar is “Those who live in yoga and see the divine light and power through yoga are Sidhdhars”.

          There are 18 Sidhdhars who are the senior most forerunners. Each one was expert in their own respective fields which they had written as poems and published as books.

          Even after attaining samadhi, Sidhdhars keep living which is known as Jeeva Samadhi. Sidhdhars have the power to attain Samadhi on their own will. They know the date, time and place to attain Samadhi priory. Energy will remain in and around the body as if it was alive which will keep blessing the devotees.

          From My experience, I feel positive energy more in Jeeva / Maha Samadhis. They have been our gurus by teaching us what is life, why to live a life, and how to live a life.

          It is not that easy to have a dharshan of a living Sidhdhar and get his blessings. They cant be identified as they can be in disguise form. If you are a person to follow “Service to human is service to god”, then you can have the dharshan and blessings of the Sidhdhar.

          My portal will guide you to locate Living Sidhdhars and Sidhdhar’s Jeeva / Maha Samadhis. Some Jeeva Samadhis are maintained by trust, some Samadhis are maintained by individuals allowing peoples to walk in for prayers and meditation. There are some Samadhis which are demolished and some not maintained at all. There are few Samadhis which belongs to an individual who are not ready to disclose it as Jeeva Samadhi. Awareness about Jeeva Samadhis and Sidhdhars in today’s world are very less.

.

Siddhar