Sivan Sir Swamy

.

Scroll down for English Version.

.
.

          சிறுவயதில் சிவன்சார் கும்பகோனம் நகரப்பள்ளியில் படித்தார். பதினோராம் வகுப்பை முடித்தபின் அய்யன் கலை மற்றும் கைவினைக் கல்விப் பள்ளியில் சித்திரப் பயிற்சி பெற்றார். புகைப்படக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.

          கல்வியை முடித்தபின் கும்பகோணத்தில், “சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ” என்ற பெயரில் தன் சுயதொழிலை ஆரம்பித்தார். மஹாபெரியவரின் அபூர்வமான புகைப்படங்களை இவர் எடுத்திருக்கிறார்.

          ஒருதினம், காவேரி டபீர் படித்துறையில் தன் குளியலை முடித்துக் கொண்டு மகாபெரியவர் வடக்கு நோக்கி படிகளில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அநேகர் குழுமியிருந்தனர். இந்தக் காட்சியைப் படமாக்க வேண்டு மென்று பெரியவர் விரும்பினார். சிவன்சார் உடனே ஆற்றில் இறங்கி அந்தக் காட்சியை அருமையாகப் படமெடுத்தார். பின்னொரு நாளில் “பெரியவா எனக்கு வைத்த சோதனை இது” என்று சிவன்சார் கூறினார்.

          தற்காலத்தில் உள்ள முன்னேறிய வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே, தன் முதல் முயற்சியிலேயே சிதம்பரம் கோவிலின் நான்கு கோபுரங்களையும் ஒரே படத்தில் வருமாரு புகைப்படமெடுத்தவர் இதே சிவன்சார்தான்.

          திரை ஓவியங்கள் வரைவதிலும் சிவன்சார் கைதேர்ந்தவர். இவர் வரைந்த மகாபெரியவாளின் ஓவியமொன்று முடிகொண்டான் வாஞ்சிநாதனுடைய இல்லத்தில் இப்போதும் இருக்கிறது.

          வெங்டேஸ்வரா ஸ்டூடியோவை வைத்து நடத்தி வந்த இவருடைய பக்தர் பெரியசாமி என்பவரிடம் தன்னுடைய ஸ்டூடியோவையும் பின்னொரு நாளில் ஒப்படைத்து விட்டார்.

          சிவன்சாரைப் பற்றி இன்னுமோர் குறிப்பு. இவரது உடல் வெப்பம் மிகமிக அதிகம். தன் உடலை நெருப்பும் வெப்பமும் – திருவண்ணாமலைத் தேயு என்று கூறுவார்.

          ஒருமுறை பேருந்துப் பயணத்தின் போது ஒருமுறை தனது இருக்கையில் இருந்து எழுந்தார். அருகில் நின்று கொண்டு இருந்தவர் அங்கே அம்ர்ந்தார், அவ்வளவுதான்; நெருப்பின் மீதே உட்கார்ந்ததுபோல அவர் துள்ளியெழுந்தார்.

          நல்லி செட்டியார் சிவன்சாரின் பரம பக்தர். நான்கு மணை கொண்ட விசாலமான இடத்தில் நல்லதோர் வீடு கட்டி, ஆச்சாரமான சமையல்காரரை ஏற்பாடு செய்து தருவதாக சிவன்சாரிடம் அவர் கூறினார். ஆனால் சிவன்சார் இதை ஏற்கவில்லை.

          பின்னொரு நாளில் தன்னுடைய அமேரிக்க நண்பரை அழைத்துக்கொண்டு நாதன் கஃபே நாதன் அவர்கள் சிவன்சாரை சந்திக்கச் சென்றார். சிவன்சாரை வணங்கிவிட்டு பெருந்தொகைக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவரோ தான் அணிந்துள்ள பருத்தித் துண்டே பாரமாக உள்ளது, இன்னும் அதிக பாரம் தேவையில்லையே என்று மறுத்து விட்டார்.

          காமாட்சிப் பாட்டி என்பவர் தினமும் பொழுது விடிந்ததும் குளித்து விட்டு மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு, உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி, அன்புடன் சிவன்சாருக்கு எடுத்து வருவார். அதில் பாதியோ, கால் பங்கோதான் சிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 ஆண்டுகள் தொடர்ந்தன. ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், சிவன்சார் அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தார். பிறகென்ன? மேலும் 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தார் பாட்டி. அவர் தினமும் சிவன்சாருக்கு கொடுத்து வந்த அப்பளம் வீண் போகுமா என்ன!

          ஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் என்ற சந்நியாச நாமம் கொண்டவர் ஆங்கரை பெரியவா. திருவல்லிக்கேணி பாகவத பெரியவரான அவர், சிவன்சார் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. அதன் பின் அவருக்கு கை-கால் செயலற்றுப் போய்விட்டன; பேச்சும் தடைபட்டது. இதனால் மனம் வருந்திய அன்பர்கள், சிவன் சாரின் நாற்காலிக்கு அருகில் சுவாமிகளை உட்கார வைத்தனர். சிவன் சாரின் கால் கட்டை விரல், சுவாமிகள் மீது பட்டபடி இருந்தது. சுவாமிகள் தும்பைப்பூவை சாரின் பாதங்களில் தினமும் சமர்ப்பித்து வந்தார். சிறிது காலத்திலேயே பாகவதர் எழுந்து நன்கு நடந்து, பழையபடி உபந்யாசமும் செய்ய ஆரம்பித்தார்.

          ஒருமுறை, “திருவெண்காடு போ” என்று சிவன் சாருக்கு உத்தரவிட்டார் மகாபெரியவா. அதுமுதல் தொடர்ந்து திருவெண்காடு செல்லலானார் சிவன் சார். திருவெண்காடு புனிதம் வாய்ந்த தலம். காசியைப் போன்றே, இந்தத் தலத்தின் காவிரி ஸ்நான கட்டத்துக்கு மணிகர்ணிகை என்று பெயர். சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி வெண்காட்டு நங்கை இங்குதான் அவதரித்தாராம். ஆலயக் குளக் கரையில் உள்ள ஆலமரமும், அதனடியில் உள்ள ருத்ர பாதமும் வெகு விசேஷமானவை. இந்தத் தலத்தில் மூதாதையருக்கு சிரார்த்தம் செய்து, ருத்ர பாதத்தில் பிண்டம் அளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

          சிவன்சார் கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவினால், குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம். இதை, மகாபெரியவாளிடம் சொன்னதும், ”சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியுமென்று உனக்குத் தெரியுமோ?” என்றாராம். அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன்சார்.

          காலப் போக்கில் நடந்த மாறுதல்கள், மக்களின் நாகரிக மோகம், பண்பாடு – கலாசார மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து, சிவன் சார் எழுதிய கருத்துக் களஞ்சியமே, “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” என்னும் புத்தகம். இதற்கு அட்டைப்படம் வரைந்தவர் ஓவியர் மணியம்செல்வன்.

          1994-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் அதிகாலை, நிஷ்டையில் இருந்த சிவன் சார், “ஒரு மகாபுருஷரை உலகம் இன்று இழக்கிறது” என்றார். பிற்பகல், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்தவர், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். மூன்று மணி அடிக்க ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, சகஜ நிலைக்குத் திரும்பி, “எல்லாம் ஆயிடுத்து கிளம்பலாம்” என்றார். 2:58 க்கு, மகா பெரியவா ஸித்தி அடைந்தார் என்ற செய்தி வந்தது.

          கலஞனாகவும், பலரும் போற்றிய மகானாகவும், ஞானியாகவும், தீர்க்க தரிசியாகவும் திகழ்ந்த அந்த சாச்சு என்கிற சிவன் சார் யார் தெரியுமா? காஞ்சி மகா பெரியவாளின் இளைய சகோதரர்தான் அவர். அவருடய ஜன்ம நட்சத்திரம் புரட்டாசி பூசம்; துவிதியை திதி.

          மேன்மைதகு சிவன்சாருக்கு சமாதியோ, அதிஷ்டானமோ கிடையாது. அவரது சிலை உருவையும், அவரது கையெழுத்துப்பிரதிகள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்களையும் கீழ்கண்ட இடத்தில் உள்ள “சிவசாகரம்” என்னும் புண்ணிய தலத்தில் காணலாம். E-ப்ளாக், SF-1, ஸ்ரீ ஜெயேந்திர காலனி, பழைய மகாபலிபுரம் சாலை (ப.ம.சா., O.M.R.), கந்தன்சாவடி, சென்னை. தொ.பே. 9600015230.

.
.

          Sivan Sar studied in Kumbakonam town High School. After completing 11th std, he had his training in drawing at Aiyan Arts and Handicrafts Educational Institution. He went through the art of photography as well.

          Subsequently he started Sivan Arts and Photo Studios. He had captured very nice photographs of Mahaperiyaval. One day, Mahaperiyava had his bath in Cauvery Dabeer Padithurai and was sitting in the steps facing northwards. Hundreds of people were standing behind him and Mahaperiyava desired this posture to be photographed. Instantly, Sivan Sar stepped down the river and clicked his camera as desired. While talking on this later on Sivan Sar said “This is a test by Mahaperiyava”. It is the same Sivan Sar who captured all the four magnificent towers of Chidambaram temple in one single shot. Sivan Sar was an expert in canvas portrait also. Mahaperiyava’s portrait by Sivan Sar is still in the house of one Mr. Vanchinathan. At one stage, he handed over his studios to a devotee who himself owned Venkateswara Studios.

          His body used to be very hot. He would point out that his body was Fire and heat – Thiruvannamalai Theyu. Once during a bus travel, he got up from the seat and a standing passenger occupied the same. Oh God! That is all, he instantly jumped up as if he sat directly on fire. Sivan Sar’s body temperature was so high.

          Nalli Chettiar was a close devotee of Sivan Sar. He offered to construct a comfortable house in a vast four ground land and arrange an orthodox cook, but Sivan Sar did not accept it.

          One day, Mr. Nathan of Nathan’s café along with an American friend went to meet Sivan Sar. They offered pranams and then politely gave a cheque for a very high amount. But Sivan Sar himself said “Even my towel is a burdern for me. I don’t want to overload any further”.

          Daily at sunrise, one old lady Kamatchi takes bath, grinds urid dhal, prepares papad and dries the same in the hot sun. In the evenings, she seasons (heat) the same in country ovan, applies ghee on it and brings it to Sivan Sar. Only a small portion of it goes as Sivan Sar’s diet. Fifteen years passed on like this. One day the grandma had a snake bite. All the doctors expressed their inability to save her. Sivan Sar administered the juice from plantain pads. What then! She lived for 20 more years. How would the papad she had been feeding go waste!

          Sri Govinda Dhamodara Swamigal (a) Aangarai Periava ie the great Triplicane Bhagavadar was extremely devoted to Sivan Sar. He once had his heart operated. His limbs ie hands and legs were inactive and he had a broken speech. Very much concerned over all these conditions his close friends took him to Sivan Sar and seated him in such a way that Sivan Sar’s toe was touching Swamigal. He was offering Thumbai flower at the feet of Sivan Sar. Within a short time he got up and started walking for performing upanyasas.

          Once Mahaperiyava ordered Sivan Sar to go to Thiruvenkadu and from then on, Sivan Sar was regularly visting Thiruvenkadu. It is a holy place. Like Kasi, the bathing ghat at Cauvery at this place is called Manikarnikai. This is the birth place of Venkattu Nangai, wife of the great Siruthonda Nayanar. The banyan tree near the temple tank and the holy Rudhra padam under the tree are specially popular. Performing Srartha to elders at this place and offering pinda at Rudhra pada are gifted deeds.

          Sivan Sar used to keep some paddy in his palm and raise a particular voice. Sparrows came flying and took paddy as their food perching on his hand. When this was conveyed to Mahaperiyava, he said “Do you know that Sachu knows three launguages ie the launguages of men, animals and birds.

          “People on the steps of ladder” (Enippadihalil Maandhargal) is a treasure of knowledge written by Sivan Sar after a thorough research of the periodical human craze for modernity and the changes of Customs and Culture. Maniam Selvam portrayed the cover page of this treasure book.

          Early morning on 8th January 1994, Swamy in meditation said, A Mahapurush (Holy Personality) is being lost by the world today. At the residence of the dance artiste Padma Subramaniam in the afternoon, he sat as a statue for quite some time. Just a few minutes before 3’ o clock, he returned to normalcy and declared, “Everything is over. Let us start”. News came that Mahaperiyava attained Samadhi at 2:58pm.

          Do you know who this Sachu @ Sivan Sar, the well known Mahan, Artiste and Gnani with clear foresight is? He is the younger brother of Kanchi Mahaperiyava. Puratasi (Tamil Month) Poosam (Tamil star) is his birth star. Thvidhiyai is his Thithi.

          We do not have Samadhi or Adhistanam of Sivan Sar. We can have dharshan of his statue, manuscripts and things used by him at “Siva Sagaram”, E-block, SF-1, Sri Jayendra Colony, Kandanchavadi, O.M.R., Chennai 600096. Mobile +91 96000 15230.