Pattinaththaar Swamy

.

Scroll down for English Version.

.

          காவிரிப்பூம்பட்டணத்தில் சிவனேசருக்கும் ஞானகலைக்கும் மகனாகப் பிறந்தார் இந்த சித்தர். சிவபெருமானே செல்வனாகப் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. குழந்தைக்கு ஸ்வேதாரன்யர் எனப் பெயரிடப்பட்டது திருவேங்கடர் என்றும் அறியப்பட்டார். திருவேங்கடருக்கு 5 வயதான போது தந்தையை இழந்தார்.

          சிவசிதம்பரம், சிவகாமி ஆகியோரின் மகளான சிவகலைக்கும் திருவேங்கடத்துக்கும் திருமணம் நடந்தது. நீண்ட காலமாகியும் வாரிசு வந்தபாடில்லை. திருவிடைமருதூரில் வீற்றீருக்கும் இறைவன் மருதவாணரை நோக்கி தம்பதியிருவரும் குழந்தை வேண்டித் தவமிருந்தனர். “நானே உங்கள் மைந்தனாக விரைவில் வருவேன்” என்று இறைவன் வரம் அருளினார்.

          சிவபக்தரான ஏழை சிவசருமர் என்பவர் சிவபக்தர்களைப் பராமரிப்பதிலேயே தன் செல்வம் முழுவதையும் அழித்தார். அவரது கனவில் ஒரு நாள், “கோவில் வில்வ மரத்தடியில் ஒரு குழந்தையாக என்னைக் கான்பாய், அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் திருவேங்கடரிடம் கொடு. குழந்தையின் எடைக்கு எடை பொன் கொடுப்பார் அவர்”, என்று குறி சொன்னார். இறைவனே சொன்னால் அது நடக்காமலா போய்விடும்? நடந்தது. மருதவாணர் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டது.

          மருதவாணர் தந்தையின் தொழிலான கடல் வாணிகத்தை ஏற்று நடத்தினார். ஒருமுறை வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து திரும்பியதும், மருதவாணர் தன் தந்தையிடம் ஒரு பெட்டியைக் கொடுத்தார். திருவேங்கடர் ஆவலுடன் பெட்டகத்தைத் திறந்தார். உமியாலான உருண்டைகளை உள்ளே கண்டார். அத்துடன், காகிதத்தில் எழுதபட்ட குறிப்பொன்றும் இருந்தது. “காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்பதுதான் அந்த வாசகம். திருவேங்கடரின் மனதை அது ஆழமாகவும் காரமாகவும் பாதித்தது. அன்றிலிருந்து வாழ்வில் சகலத்தையும் துறந்து ஒற்றை வேட்டியுடன் கிளம்பினார். அனைத்து சிவன் கோவில்களுக்கும் சென்று ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடினார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்ததால் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்டார்.

          பட்டினத்தார் காசியில் இருந்த போது பத்திரகிரி அரசரைத்தன் சீடராக ஏற்றுக் கொண்டார். பிற்காலத்தில் இருவரும் திருவிடைமருதூரில் தங்கி இருந்தனர். அங்கே, பத்திரகிரிக்கு சிவபெருமான் நற்கதியளித்தார். பட்டினத்தாரிடம் ஒரு கரும்புத்தண்டைக் கொடுத்து “இந்தக் கரும்பு முற்றி இனிப்புச்சுவையடையும் இடம்தான் நீ நற்கதியடையும் ஊராகும்” என்று அறிவித்தார். அன்று முதல் அவர் நெடுந்தூரம் பயணம் செய்து பல கோவில்களைக் கண்டு களித்தார். இறுதியாக, அவர் திருவொற்றியூரை அடைந்த போது, கரும்பு முற்றி இனித்தது. அங்கேயே தங்கினார்.

          சுவாமிகள் அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் கூடி மணல் வீடு கட்டி விளையாடுவதுண்டு. அங்கே மணலில் குழிதோண்டச் சொல்லி, சாமி அதில் அமர்ந்து கொண்டு குழியை மூடச் சொல்வார். சிறிது நேரம் சென்றபின் குழியில் இருந்து வெளியே வருவார். இப்படியே அடிக்கடி நடக்கும். ஒரு குறிப்பிட்ட நன்னாளில் சாமிகள் குழியில் இறங்கியதும் சிறுவர்கள் குழியை மணலால் மூடினர். நெடுநேரம் சென்றபின்னும் சாமி வெளியில் வரவில்லை. சிறுவர்கள் பெரிதும் சஞ்சலப்பட்டுப் பெறியவர்களிடம் நடந்ததைக் கூறினர். ஊர்ப்பெரியவர்கள் அங்கே வந்து குழியைத்திறந்து பார்த்தனர். உள்ளே சாமி இல்லை, ஒரு சிவலிங்கம் இருந்தது.

          ஆம், அவ்விடம்தான் மஹான் பட்டினத்தாரின் ஜீவ சமாதி.

.
.

          This great Sidhdhar was born to Sivanesar and Gnanakalai in Kaveripoompattinam. It is belived that Lord Shiva himself was born as Pattinathaar. He was named as “Swethaaranyar” and was also called “Thiruvengadar”. At the age of five, Thiruvengadar lost his father.

          Thiruvengadar got married to Sivakalai, daughter of Sivachidambaram and Sivakami. They did not get a child for a long time. Both Thiruvengadar and his wife prayed to Lord Marudhavaanar in Thiruvidaimarudhur for a child. Lord blessed them by saying “I myself will come as your son v.soon”.

          Sivasarumar, a poor man and devotee of Lord Shiva spent all his wealth in looking after the devotees. Once Lord Shiva appeared in his dream and said “you would find me in the form of a baby below the Vilva tree in the Temple. Hand over that baby to Thiruvengadar. He would give you a bag of gold equal to the weight of the baby.”.The same materialized. The baby was named as Marudhavanar.

          Marudhavanar adopted his father’s Marine trading. Once, on his return from a trade tour, Marudhavanar gave a box to his father. When Thiruvengadar opened the box, he saw some small husk balls and a note reading “Not even a needle without hole will accompany your last journey”.

          Thiruvengadar was thrilled and renounced everything. He left with just a dhothi, visited all Lord Shiva Temples and scripted many songs. As Thiruvengadar was born in Kaveripoompattinam, he was called as Pattinathaar.

          When Pattinathaar was in Kasi, he accepted King Badragiri as his disciple. Later on, both were staying in Thiruvidaimarudhur for a while. Lord Shiva granted salvation to Badragiri and gave a sugarcane to Pattinaththaar saying “The place where this sugarcane ripens and tastes sweet will be the place of your salvation”. Since then, Pattinaththaar travelled long visiting many Temples. Finally sugarcane ripened and tasted sweet when Swamy reached Thiruvottiyur. Thereafter, he stayed there.

          Swamy used to play with the small kids at the sea shore there by building Sand houses. Also, he used to ask the kids to dig a deep pit in the sand. Swamy would sit inside the pit and ask the kids to cover the pit. Swamy would come out of the pit after some time. This was a frequent event. One fine day, as usual, Swamy sat in the pit and the kids covered it with sand. But, this time Swamy did not come out for a long time. The kids were frightened and informed the elders. The elders came to the spot and dug up the pit. They found a Shiva Lingam instead of Swamy. Yes, that is the Jeeva Samadhi of Pattinathar, the GREAT.