Oodha Swamy

.

Scroll down for English Version.

.
.

          பதினெண் சித்தர்களில் ஒருவரான போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தர்கள் அவதரித்தனர். இவர்களில் ஓதா சுவாமிகளும் ஒருவர். இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள் பக்தர்கள்.

          பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ., தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தனர் சுவாமிகளின் முன்னோர். ஓதா சுவாமிகளின் தந்தையான பரமேஸ்வர ஐயர், ஒருமுறை வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றார். வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் திரும்பி வந்தார். யாத்திரை சென்ற ஏழு ஆண்டுகளும் கடுமையான விரதமிருந்து காசி விஸ்வநாதருக்கு கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டார். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சன்னதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. “காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாகப் பிறக்க போகிறான்” என்று அங்கே ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. காசி விஸ்வநாதரின் அருளால், 1850 புரட்டாசி திருவாதிரையன்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு முருகப்பெருமானைக் குறிக்கும் சுப்ரமண்யன் என்று பெயர் சூட்டினார். பின்னாளில் இவர் சுப்பையா என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

          தந்தையார் மறைந்த பிறகு, தன் தாயாரிடம் “நீ என்னை எப்போது கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன், எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன” என்று சொல்லி விட்டு, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். திருச்சுழியில் பிறந்த பகவான் ரமண மகரிஷி, தந்தையின் பணி மாறுதல் காரணமாக குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு இடம் மாறினார். அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்து வந்தது. நகராட்சி பள்ளியில் சேர்ந்து ரமணர் துவக்கத்தில் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று வந்தார். ஆனால், அவதூதராகத் தெருக்களில் வலம் வந்த ஓதாசுவாமிகளை ஒரு முறை பார்த்ததும், அவர் செல்லும் இடமெல்லாம் பின் செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓதாசுவாமிகள், அவரை அருகே அழைத்து “திருவண்ணாமலைக்குச் செல்… அங்கே உனக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார்” என்றார். அதன்பின் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு புறப்பட்டார் ரமணர்.

          ஒரு சமயம் சிருங்கேரி மடத்தின் முப்பத்திரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகள் ,திண்டுக்கல் அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடத்தில் முகாமிட்டிருந்தார். ஒரு தெருவழியாக செல்லும் போது அங்குள்ள சாக்கடை நீரில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஓதா சுவாமிகளைப் பார்த்த பாரதி சுவாமிகள் பல்லக்கை நிறுத்தச் சொன்னார். கீழே இறங்கி சாக்கடையில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஓதா சுவாமிகளின் அருகே வந்தார். அங்கிருந்தவர்கள் இவன் பித்து பிடித்தவன் என்று கூறினார்கள். “அப்படியெல்லாம் கூறாதீர்கள், மற்றவர்களின் அழுக்கைப் போக்குவதற்காகவே இவ்வாறு நீராடுகிறார். இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது எவருக்கும் எளிதில் கைகூடாது. நானும் இது போன்ற நிலையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார்.

          ஒரு நாள் ஓதா சுவாமிகள், தன் பக்தரான சதாசிவ ஐயரின் கனவில் தோன்றி, “சதாசிவா, இன்னும் சில நாட்களுக்குள் நான் சித்தி அடையப் போகிறேன். நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய்” என்று சொல்லி மறைந்தார். 1906-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி திருவாதிரையன்று சுவாமிகள் சித்தியடைந்தார். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்குப் பின் பக்கம் இருக்கிறது இவருடைய ஜீவ சமாதி.

          சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் திருவாதிரைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது அதிஷ்டானம் அமைக்கப்பட்டு அனைவரும் ஓதாசுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.

.
.

          Infinite number of Sidhdhars appeared on this earth. Bogar, the great is one among the top Eighteen Sidhdhars and Oodha Swamy also known as Subbiah Swamy among his devotees is one such.

          Swamy’s family was living in Balasamudram, a village just 11km away from Palani. Swamy’s father Parameshwar Iyer once made a trip to north Indian states. He returned home only seven years later. During this holy trip, he observed strict penance and was immensely happy to perform holy Gnga water Abhishek to Kasi Viswanathar. He received the blessings in the voice of Jothilingam declaring “Kasi Viswanathan will be born as your son”. God’s Grace! He got a son on Purattasi (Tamil month) Thiruvathirai (Tamil star) of 1850. Parameswara Iyer named him Subramanian, the popular name of Lord Muruga. In later years, the common folk called him Subbiah.

          After losing his father, he told his mother, “I have some deeds to be carried out. I will be with you whenever you call” and left home with his mother’s blessings.

          The great Ramana was born in Thiruchuzhi. His family was shifted to Dindigul as a result of his father’s transfer. There they lived near Abirami Amman Temple. He was admitted in Municipal School and was attending classes regularly.All these were until he saw Oodha Swamigal wandering in the streets. He started following Swamy wherever he wandered. One day, Swamy identified Ramana, called him and said “Go to Thiruvannamalai. Your work is awaiting your arrival. Annamalayar is eagerly expecting you”. Then Ramana left home leaving a letter behind.

          There is Shringeri Madam in the road opposite Abirami Amman Temple in Dindigul. Thirty second pontiff Jagadguru Narasimha Bharathi Swamigal of Shingeri was once camping at that place. While going through a street, he saw Oodha Swamigal bathing in a drainage canal and stopped. He got down from the palanquin and approached Oodha Swamigal. The people around told him that the fellow was mad. But the Jagadguru replied, “Don’t think like that. He takes such a bath only to remove the unwanted dirt accumulated in others. It is not easy to reach such a stage in the life of God faith. I am also eagerly waiting to reach that position”.

          One day, Oodha Swamy appeared in the dream of his devotee Sadhasiva Iyer and said “Sadasiva, I shall attain Samadhi in a few days. Search for a suitable location for my permanent settlement”.

          Swamigal attained Samadhi on 10th Oct 1906 of Thiruvathirai (Tamil star). His birth star also is the same Thiruvathirai. His Jeeva Samadhi is behind Kottai Mariamman Temple at Dindigul. Later on, Adhistanam was constructed and regular worship of Oodha Swamigal continues till date.