Kuzhandai Aanandar Swamy

.

Scroll down for English Version.

.
.

          மதுரை மாநகரின் அருகேயுள்ள சமயநல்லூர் என்னும் குக்கிராமத்தில் திரு. அண்ணாசாமி என்பவர் தன் மனைவி திரிபுரசுந்தரியுடன் வாழ்ந்து வந்தார். நெடுங்காலமாகக் குழந்தைப்பேறு இல்லாம்ல் வருந்தியபின் அன்னை மதுரை மீனாட்சியம்மனை வேண்டி நின்றனர். அம்மன் அருளால் அவர்களுக்குக் கிடைக்கும் குழந்தையை அம்மன் பாதத்திலேயே அர்ப்பணிப்பதாகவும் நேர்ந்து கொண்டனர்.

          அம்மனின் ஆசி அபரிமிதமாகக் கிடைத்தது. ஆம், இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். ராம் என்றும் லட்சுமணன் என்றும் பெயரிட்டனர். குழந்தைகள் வளர்ந்தனர். மீனாட்சி அம்மன் ஒரு நாள் பெற்றோரின் கனவில் தோன்றி அவர்களது வேண்டுதலை ஞாபகப்படுத்தினார். பெற்றோரும் தம் கடமையை உணர்ந்து குழந்தைகளைக் கோவிலுக்கு கூட்டிச்சென்றனர். ஆனாலும் இரண்டில் எந்தக் குழந்தையை அம்மனுக்கு அர்ப்பணிப்பது என்று மனம் குழம்பினர். அதிலும் அம்மனின் ஆசி கிட்டியது.

          அவர்கள் முன்னே அம்மன் கோவில்பட்டர் உருவில் தோன்றி உடலில் அருட்குறிகள் உள்ள குழந்தையைத் தேர்ந்தெடுக்கும்படி யோசனை கூறினார் (கை, கால்களில் சங்கு, சக்கரக் குறிகளும், நாவில் நாராயணன் நாமமும்).

          மண்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் அவரது அமைச்சர் ஒருவர் வழக்கம் போல் கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கே அம்மன் படையலில் சிலவற்றை ஒரு பொடியன் ருசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அமைச்சர் ஆடிப்போய் விட்டார். கோவில் குருக்கள் “அது ‘கடவுளின் குழந்தை” என்று கூறி நடந்தவற்றை விளக்கினார். அதைக்கேட்டவுடனே அமைச்சர், “அது உண்மையென்றால், அவனால் கோவில் திருக்குளத்து நீரின் மேல் நடக்க முடியுமே” என்று எக்காளமிட்டார். ஐந்து வயதே நிறைந்த அச்சிறுவன் முகத்தில் புன்னகையுடன் பொற்றாமரைக் குளத்தின் மீது சர்வ சாதரணமாக நடந்தான். அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.

          சிறுவன் 7 வயதை எட்டியபோது கணபதி பாபா என்னும் யோகி கோவிலுக்கு வந்து அவனைக் காசிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பாபாவிடம் பக்திப் பாடங்களையும் மந்திரங்களையும் கற்ற பின் அங்கேவரும் பக்தர்களின் பிரச்சினைகளைக் கேட்டு அவற்றைக் தீர்க்க உதவினார். பக்தர்கள் அவரை திரிலிங்க சுவாமிகள் என்று அழைக்க ஆரம்பித்தனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை காசிக்கு வந்தபோது சுவாமிகளைத் தரிசித்து அவரது ஆசிகளைப் பெற்றார். அதன்பின் அவர் சிவதரிசனத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட முயன்றபோது, சுவாமிகள் “சிவதரிசனத்தை இங்கேயே கண்டு கொள்” என்று கூறிவிட்டு தானே சிவபெருமான் உருவெடுத்தார். பிற்காலத்தில் திரிலிங்கசாமி காசியிலேயே முக்தியடைந்தார்.

          சில ஆண்டுகள் கழிந்தபின் நேபாள தேசத்தில் மறுபடியும் அவதரித்தார். அங்கே எந்த வைத்தியராலும் சரிசெய்ய முடியாத குட்ட நோயாளி ஒருவரின் நோயைத் தீர்த்து வைத்தார். அதன்பின் சாமிகளின் ஆசியைப் பெற ஏராளாமான பக்தர்கள் குவிந்தனர். இப்பிறவியின் இறுதியில் கரூர் பசுபதிநாதர் கோவிலில் சமாதியடைந்தார் – ஆம் இரண்டாவது சமாதி.

          சாமிகளின் வாழ்க்கைப் பயனம் இன்னும் முடிவடையவில்லை. தென்காசியில் மறுபடியும் அவதரித்தார். இங்கேயும் அவர் சுற்றுப்புற மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர்களின் சுகவீனங்களையும் மற்ற பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார். சன்னதி மடம் தெருவில் உள்ள சங்கரன் அவர்களின் வீட்டில்தான் அவரது மூன்றாவது சமாதி இருக்கிறது – அந்த சமாதியின் இப்போதைய பெயர் நெல்லையப்பர் சமாதி.

          அவ்ர் அடுத்ததாகத் தோன்றிய ஊர் மதுரை. சமுதாயத்தை பவகைகளிலும் மேம்படுத்திய வண்ணமிகு வாழ்வுக்குப்பின் அவர் நான்காவது முறையாக சமாதியடைந்த இடம் மதுரை மாநகரில் உள்ள காளவாசல் என்னும் பகுதியாகும்.

.
.

          Sri Annaswami was living with his wife Tripura Sundari in Samayanallur near Madurai. They didn’t get a baby for a long time and so they prayed to Goddess Meenakshi to bless them with a child. They took oath to offer the baby blessed by Madurai Meenakshi at her feet in the Temple.

          Lord Meenakshi Amman the great blessed them with twins. They named one son Ram and the other Lakshmanan. Days passed by and the children were growing well. Madurai Meenakshi appeared in the dream of the couple and reminded them of their oath. The parents then took their kids to the Temple. But they were much confused as to which child to offer to Lord Meenakshi Amman. But the Almighty gracefully presented before them as a priest and guided them to choose the child having divine signs on his body (Sangh and Chakkaram in limbs, and Lord Narayanan Namam in the toungue.).

          Thirumalai Nayakkar was the ruling king at that time. One of his ministers during his regular visit to the people was taken aback to notice a small kid enjoying the offerings made to Goddess. The remple priest explained in detail and referred to the kid as God’s Son. The minister shot back, “if it is so, he must be able to walk on the water of the holy tank”. The 5 year old child casually walked on the Golden Lotus Temple with a smile. This naturally baffled everyone present.

          When the boy was seven years old Saint Ganapathy Baba visited the Temple and took him to Kasi. The boy learnt divinity, manthras, etc. from the Baba and this enabled him to solve the problems of visiting devotees. Devotees started calling him Trilinga Swamy. Once, Ramakrishna Paramahamsa during his visit to Kasi met Trilinga Swamy and got his blessings. Then Ramakrishna was leaving the place for having Lord Shiva Dharshan. Instantly Trilinga Swamy said “Have Dharshan here itself”. He appeared as Lord Shiva and blessed all. Swamy attained Samadhi at Kasi.

          Some more years passed and he took one more birth in Nepal. One nepali was critically ill of leprosy, not yielding to any medication. By God’s grace, he approached our Swamigal and was completely cured. People started pouring in to receive his blessings. Finally, he attained Samadhi at Karur Pasupathinadhar Temple – yes, second time Samadhi.

          The mission of this great soul was not yet over. One more life brought him to Tenkasi. Here again, he was of immense help to the people by curing their ill health and solving their different problems. His Samadhi here was in Sankaran’s house in Sannidhi Madam Street – now well known as Nellayappar Samadhi.

          Now happened the fourth birth of Swamy at Madurai. After a colourfully bright life of uplifting the community, he attained the Fourth Samadhi at Kalavasal in Madurai.