Kalliyadi Brahmman Swamy

.

Scroll down for English Version.

.
.

          சமீபகாலத்தில் வாழ்ந்த மாபெரும் சித்தர் ஒருவரின் ஜீவசமாதியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றூரில் பிறந்து வளர்ந்த தம்பதியரின் மைந்தனாகப் பிறந்த பெருமை எனக்குண்டு. அந்த மஹானை எங்கள் ஊருக்கு அழைத்து வந்தவர்தான் எங்கள் தாத்தா வெ. கார்வண்ணன் செட்டியார் (வெ.கா) அவர்கள்.

          அந்த ஊர்தான் புதுப்பட்டி, எங்கிருக்கிறது புதுப்பட்டி? திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் புறப்படுங்கள். 18கிமீ தூரத்தில் இருக்கிறது வடமதுரை என்னும் பேரூர். அங்கிருந்து தெற்கு நோக்கி நத்தம் செல்லும் சாலையில் நீங்கள் 5-கிமீ தூரம் பயணம் செய்தால், வந்துவிட்டது புதுப்பட்டி.

          மதுரை அழகர் கோவிலுக்கு அருகில் உள்ளது பில்லிசேரி என்னும் கிராமம். 1874-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதியன்று, பில்லிசேரியில் இருக்கும் அழகியசிங்கர், ராமாயி அம்மாள் தம்பதியர் ஒரு மகனைப் பெற்றெடுத்தனர் சபாபதி என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். 16 வயது நடக்கும் போது சபாபதி தன் வீட்டிலிருந்து வெளியேறி 40 மைல் தூரத்தில் இருக்கும் மேற்கூறிய வடமதுரைக்கு வந்து சேர்ந்தார். ஒரு வேட்டியை மட்டுமே உடுத்துவதும், தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவதுமாக எளிமையாக வாழ்ந்து வந்தார். சில காலம் கழித்து காஞ்சிபுரம் சென்றார். அங்கே கோனேரிக்குப்பம் என்னும் இடத்தில் ஸ்ரீலஸ்ரீ ஞானதேசிகரின் சீடராக இருந்தார். இப்படியே சிலகாலம் கழித்து, மறுபடியும் வடமதுரைக்கே திரும்பினார்.

          அவர் உருவத்தில் குட்டையாக இருந்தார். கற்களை எரிந்து உள்ளூர் குழந்தைகள் அவரைக் கேலி செய்து விளையாடுவதுண்டு. இதை பற்றியெல்லாம் அவர் மனதில் போட்டுக்கொள்வதே இல்லை. ஓர்நாள் வடமதுரையில் பேய்மழை பெய்தது. அந்த நேரத்தில் சபாபதி அவர்கள் ஒரு கள்ளிப் புதருக்கடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஊர் முழுவதும் மழையில் மூழ்கி மக்கள் தத்தம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த போது, சாமிகள் மீதோ, அவர் அமர்ந்திருந்த கள்ளிப்புதரைச் சுற்றியோ ஒரு சொட்டு மழைநீரும் விழவில்லை. நம்பமுடியாத இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அன்று முதல் அவரைக் கள்ளியடிசாமி என்றே குறிப்பிட ஆரம்பித்தனர்.

          மற்றொரு நாள் எங்கள் தாத்தா வடமதுரைப்பக்கம் சென்று கொண்டிருந்தார். குழந்தைகள் சாமி மீது கல்லெறிந்து விளையாடியதைக் கண்டு மிகவும் வேதனைப்பட்டார். சிறுவர்களை விரட்டிவிட்டு எங்கள் தாத்தா அவரைத் தன்னுடன் எங்கள் ஊருக்கு அழைத்து வந்தார். சாமிகளை நன்கு குளிப்பாட்டி உண்பதற்குப் பழங்கள் அளித்தார். அங்கேயே தங்கச் சொல்லி அவர் சொன்னதை சாமிகளும் ஏற்றுக் கொண்டார். சாமிகள் புதுப்பட்டியில் தங்கி ஊர் மக்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார். அவ்வப்போது சில அதிசயங்களையும் செய்தார்.

          ஒருகாலகட்டத்தில் பஞ்சம் ஊரை வாட்டிய போது புதுப்பட்டி மக்கள் குடிநீர் கூட இல்லாமல் மிகவும் அல்லல் அடைந்தனர். ஊர் போற்றிய சாது ஊரின் ஒரு மூலையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே கிணறு வெட்டச் செய்தார். என்னே ஆண்டவன் மகிமை!! கிணற்றில் நிறைய நல்ல தண்ணீர் கிடைத்தது. புதுப்பட்டி மக்கள் மட்டுமின்றி சுற்றிலுமுள்ள மற்ற கிராமத்து மக்களும் அந்த நீரின் சுவையை அனுபவித்து ஆனந்தமடைந்தனர்.

          இறுதியாக, தம்முடைய இப்பிறவி வாழ்வின் கடைசி நாட்கள் நெருங்குவதை உணர்ந்த குரு கிணற்றுக்கு அருகிலேயே சமாதியடையும் இடத்தையும், நாளையும் அறிவித்தார்.

          அறிவித்தபடியே 1941 ஜனவரி 21 தை மாதம் விசாகத்தன்று. அவர் சமாதியடைந்தார். அவர் குறிப்பிட்ட இடத்திலேயே ஜீவசமாதி அமைக்கப்பட்டது. சமாதியை மையமாக வைத்து, கோவில் வாஸ்து முறைப்படி அருமையான பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலும் அதன் அருகே அமைந்திருக்கும் அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலும்தான் ஊரின் நுழைவாசல்.

          ஒவ்வொரு ஆண்டும் இந்த சமாதி நாளான தை விசாகதினமன்று குரு பூஜை அனுசரிக்கப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திருச்சி, மதுரை, திருவரங்கம் போன்ற தூரத்து ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குருபூஜை விழாவில் கலந்து கொள்கின்றனர். அனைத்து மக்களிடமிருந்தும் பெறப்படும் எண்ணற்ற அரிசி மூடைகளையும் ஒன்று சேர்த்து முறைப்படி சமையல் செய்து குரு கள்ளியடிசாமிக்கு படைக்கப்படுகிறது. கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் முறையாக குருவை வழிபட்டபின் ஊர்மந்தையில் சுடும் வெயிலிலும் ஒழுங்கான வரிசையில் அமர்ந்து படையல் சாதத்தை வேண்டுமளவு பிரசாதமாக ஏற்று மகிழ்கின்றனர்.

          அடுத்த ஆண்டு குருபூஜை விழாவைத் தவற விடாதீர்கள். தேதி போன்ற மற்ற விவரங்களை அறிய இந்த எண்ணை நாடவும். +91 9840411176.

.
.

          I am really proud of being the son of a couple born in a village which houses the Jeeva Samadhi of a great Sidhdhar. Still more excited to know that it is my MIGHTY GRAND FATHER V. Karvannan Chettiar (V.K.), who brought the Mahan to our village. .

          Pudhuppatti is the name of our village. Where is it? Start from Dindigul on the National Highway to Trichy. On the 18thkm you reach Vadamadurai. Turn towards south on the road leading to Natham. On the 5thkm is my village Pudhuppatti. .

          Pilliseri is a village near Madurai Azhagarkovil. Ramayi Ammal and Azhagiya Singar got a son on the 11th August 1874 and named him Sabapathi. At his 16th age, he left his house and reached the above said Vadamadurai, some 40 miles away from Pilliseri. He was leading a simple life there putting on just a dhoti and taking just one time meals daily. After sometime, he left for Kanchipuram. He placed himself at the feet of Sri La Sri Gnanadesikar as his disciple at Kanchipuram. Some more years passed by and he returned back to Vadamadurai. .

          He was short in stature and the local children used to mock at him and pelt stones as well. But he was not in anyway disturbed. One day Vadamadurai experienced torrential rains. At that moment, he was in deep meditation sitting under a Cactus bush, known as Kalli in Tamil. When the entire Vadamadurai was totally drenched in rain water and the people could not come out of their houses, not a single drop of rain fell on our Sidhdhar or the place around him. On witnessing this rare wonder, people started calling him Kalliadi Swamigal (saint beneath the Cactus bush). .

          One day, my grand father was passing by Vadamadurai. He was very much disturbed to see children indulging in their usual mischief of pelting stones and mocking at the Swamigal. He chased the children away and brought the Swamigal home to our village. He arranged a nice bath and offered him fruits. He requested him to stay with him and Swami agreed. He stayed in Pudhuppatti village and was helping the villagers in all possible ways – also performing some wonders now and then. .

          The village was once passing through acute drought. People were very much suffering even for drinking water. The Sidhdhar came to their rescue. He located a spot in one corner of the village and arranged for digging a well. How great is His Mercy! The well gushed with plenty of water – very nice in taste for drinking. The people from surrounding villages also started crowding Pudhuppatti to quench their thirst. .

          The Sidhdhar at last felt that he was nearing the end of his present birth. He pointed out a location near the well as his Samadhi spot and announced the date also. This came true on 21st Jan 1941 ie Visakam star of Thai (Tamil Month). .

          There is one Amman temple and one Ganesh temple nearby. These three temples are the entry point of the village. .

          Every year, this Samadhi day ie Thai Visakam is being observed as Gurupuja. This annual Gurupuja is celebrated not just by the local villagers alone but also by thousands of people from surrounding villages and faraway places like Trichy, Madurai, Srirangam, etc.. Tons of rice bags is being received as offerings from devotees. The same is cooked in a specially set pattern and offered to Guru Kalliadi Swamigal (Padayal) . The thousands assembled in the village worship the Guru with all their family members. .

          All the devotees then sit in orderly rows under the hot Sun in the open village ground (Mandhai) and take the padayal. .

          Don’t miss next Gurupuja. Contact +91 9840411176 to have further information like Gurupuja date etc….