Echchil Porukki Swamy

.

Scroll down for English Version.

.
.

          திருச்சி-மதுரை சாலையில், திருச்சிக்கு அடுத்து வருவது விராலிமலை. இங்குதான் ஆறுமுக சாமிகளின் காலம் கழிந்தது.

          அழுக்கடைந்த காவி வேட்டிதான் இவரது ஆடை முழங்கால் வரை நீண்ட மேலங்கியும் அணிந்திருப்பார். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் விராலிமலையில் தெற்குமலையின் அடிவாரத்தில் ஒரு குகையில் வேல்வடிவத்தை பிரதிஷ்டை செய்து அங்கேயே பலகாலம் வசித்து வந்தார். அவரது எட்டு வயதிலேயே மூதேவி (வாராஹி என்றும் சொல்வர்) அவரது உடலில் குடி கொண்டாளாம்.

          யாரேனும் சாப்பாட்டை இலையில் கொடுத்தால், சாப்பிட்டபின் அந்த இலையை மடித்து ஒரு மூலையில் வைப்பாராம். சில நேரங்களில் குகைக்குள்ளேயே சாப்பாட்டை வாரி இரைப்பதும் உண்டு. அங்கிருக்கும் ஈ, எறும்புகளுக்காகப் பந்தி வைத்திருப்பாரோ!

          எச்சிக்கலைசாமி, கர்மவினைச்சித்தர், எச்சிக்கலையும் பொறுக்கும் சாமி (பக்தர்களின் எவ்விதச் சிக்கலையும் தானே வாங்கிக் கொண்டு பொறுத்தாள்பவர்) என்றெல்லாம் இவரை அழைப்பார்கள். “எச்சில் என்பது அசூயைப்படக் கூடியதில்லை; அசுத்தம் அல்ல; மனித மனதில்தான் வேறுபாடு ஆழப்பதிந்திருக்கிறது” என்று சாமிகள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இப்படித்தான் அவர் எச்சில் பொறுக்கி சுவாமிகள் ஆனார்.

          இறுதியில் 18-05-1981 வைகாசி மாதம் விசாகம் அன்று தான் சமாதி ஆகப் போவதாக முன் கூட்டியே அறிவித்திருந்தார். “காரைக்குடிக்கு அருகேயுள்ள கோட்டையூரில் ஒரு குறிப்பிட்ட திசையில் 9-அடி ஆழத்தில் ஒரு குழி இருக்கிறது. “என் ஜீவன் அடங்கியதும் அங்கே சமாது வையுங்கள், அதைச் சுற்றிப் பின் நாட்களில் ஒரு நகரம் தோன்றும்” என்று கூறினார். அவ்வண்ணமே நடந்தேறியது.

          சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு மதில் சுவர், தியான மண்டபம், கீழ்ப்புற மண்டபம், மேற்புற மண்டபம் கட்டப்பட்டு 23-05-1994 அன்று பதின்மூன்றாவது குருபூஜையும், முதல் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறியது.

.
.

          Start from Trichy on the road leading to Madurai. The first town you come across is Viralimalai. Arumuga Swamigal lived here for quite some time.

          A dirty Safron dothi and a knee deep gown was his simple dress. Viralimalai is Lord Murugan’s abode. There is a cave at the bottom of the southern hills. Swamigal constructed a Holy Spear (Symbol of Lord Muruga) at the cave and stayed there for a long time. When he was eight years old, Moodevi (also called Varahi) entered his body. Whenever somebody offers him food, he used to eat and then keep the leaf properly folded in a corner. Sometimes, he used to scatter the food around. May be, he tried to feed the ants and other living things in the cave.

          The common man used to call him Echilkkalai Swamy, Karmavinai Sidhdhar or Echikkalayum Porukkum Swamy (one who receives and shoulders any problem of his devotees). “Echil (Salaiva) is not to be ashamed at. It is not dirty; perverted differences lie deep rooted only in dirty human minds” frequent utterances of Swamigal.

          At last, he informed in advance that he would attain Samadhi on 18-05-81 ie Vaikasi (Tamil month) Visakam (Tamil star). He said “Kottayur is near Karaikudi. There is a nine feet deep pit in a particular direction at Kottayur. Fix my Samadhi at that place when myvsoul departs. A town will develop around the place later on.

          He attained Samadhi as predicted. Compound walls, Meditation hall, East and West halls were constructed and the Thirteenth Guru Pooja and the first Kumbabishekam were celebrated with all grandeur on 23rd May 1994.