About – Vadapalani Moovar


.

Scroll down for English Version.

.
.

          முன்னொரு காலத்தில், வடபழனி முருகன் கோவில் தற்போது இருக்கும் இடத்தின் பெயர் கோடம்பாக்கம் குறிமேடை.

          அங்கே முருகப் பெருமானின் படத்தை வைத்துக்கொண்டு ஆன்மீக அருளாசிகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார் அண்ணாசாமி தம்பிரான். ரத்னசாமி என்பவர் ஆயிரம் விளக்கு பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். குடும்பப் பிரச்சினைகளால் இழுபரிபட்ட ரத்னசாமி ஆறுதல் தேடி அண்ணாசாமியிடம் வந்தார். ரத்னசாமியின் பிரச்சனைகளை விளக்கியதோடு அவற்றுக்கான தீர்வுக்கும் அவர் வழிகாட்டிணார். அவர் காட்டிய வழிப்படி நடந்து பிரச்சினைகளை ஒவ்வொன்றாக ரத்னசாமி தீர்த்துக் கொண்டார்.

          அப்போதிருந்து பூஜைக்கான பொருட்களுடன் அண்ணாசாமியை ரத்தினசாமி அடிக்கடி சந்தித்து வந்தார். தனக்குப் பின்னர் முருகப்பெருமான் பூஜைசம்பந்தமான வேலைகளைச் செய்வதில் தன் வாரிசாக ரத்தினசாமி இருக்க முடியுமா என்று அண்ணாசாமி அவரிடம் கேட்டார், “நான் ஒரு குடும்பஸ்தன், உங்கள் வேலையை எப்படி என்னால் செய்ய முடியும்? வழக்கம்போல் சாமிக்கான சேவைகளைச் செய்கிறேன்” என்று பதில் கூறினார்.

          அண்ணாசாமி தம்பிரான் விரும்பியபடி, கோவில் கட்டுவதற்காக ரத்தினசாமி நங்கொடை வசூலிக்க ஆரம்பித்தார். 1865-ம் ஆண்டு கோவில் கற்பக்கிரஹம் கட்டப்பட்டது. அதுவரை பூஜை செய்யப்பட்டு வந்த முருகப்பெருமான் படதிற்குப் பதில் அவ்விடத்தில் கருங்கல்லால் ஆன முருகன் சிலை நிறுவப்பட்டது. கோவில் கட்டுமானப்பணி காலத்தில் அண்ணாசாமி சமாதியடைந்தார்.

          இதுவரை அண்ணாசாமி செய்துவந்த காரியங்களை இனிமேல் யார் செய்வார்கள் என்று மூளையைக் கசக்கிக் கொண்டே ஒரு நாள் ரத்தினசாமி தன் கடையைத் திறந்தார். அப்போது சந்நியாசி உடையணிந்த ஒரு வயதானவர் பூட்டியிருந்த கடையிலிருந்து வெளியேறுவதைக் கண்டார். கடையை அப்படியே விட்டுவிட்டு அவர்பின்னே விரட்டிச் சென்றார். அந்த வயதானவர் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் ஓடுவதற்கு ஆரம்பித்தார். அப்போது அவர் அண்ணாசாமி தான் என்று அடையாளமறிந்து கொண்டு மேலும் அவரைப் பிந்தொடர்ந்தார். அந்த வயதானவர் கோவிலை நோக்கி ஓடி உள்ளே நுழைந்து அப்படியே மறைந்தார்.

          அதன்பின் அண்ணாசாமி செய்து வந்த காரியங்களை ரத்தினசாமி தானே எடுத்துச் செய்ய ஆரம்பித்தார். பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டே கோவில் கட்டுமான வேலயைத் தொடர்ந்தார். அண்ணாசாமி வழிகாட்டிய வண்ணம் ரத்தினசாமி திருத்தணிக்குச் சென்றார். அங்கே தன் குரல் வளத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார். அதன்பின் அவர் எங்கும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர் மணநிறைவுடன் பக்தர்களுக்கு அருளாசி பொழிவதை மட்டுமே செய்து வந்தார். அவருடைய காலத்தில்தான் “கோடம்பாக்கம் குறிமேடை” என்னும் பெயர் “வடபழனி முருகன் கோவில்” என்று புகழுடன் விளங்க ஆரம்பித்தது.

          பாக்கியலிங்கம் என்பவரைத் தன் வாரிசாக ஏற்ற பின்னர் ரத்தினசாமி 1886-ல் சமாதியடைந்தார். போட்டோவில் தோன்றுபவர்தான் பாக்கியலிங்கம் ஐயா.

          அண்ணாசாமி தம்பிரான், ரத்தினசாமி தம்பிரான், பாக்கியலிங்க தம்பிரான் ஆகிய மூவரின் சமாதி இருக்குமிடம்தான் சித்தர் கோவில் வடபழனி ஆண்டவன் கோவிலுக்கு வடக்கே – கங்கையம்மன் கோவிலில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் இந்த சமாது இருக்கிறது.

          கோவிலுக்குள்ளே தென்கிழக்கு மூலையில் உள்ளது “கோடம்பாக்கம் குறிமேடை”.

.
.

          Vadapalani Murugan Temple was once known as Kodambakkam Kurimedai.

          Annaswamy Thambiran, keeping a photo of Lord.Murugan used to accord Spiritual Blessings to people.

          Rathnaswamy had a grocery shop in Thousand Lights. Due to some family problems, he came to Annaswamy Thambiran to seek his blessings. Annaswamy Thambiran portrayed his problems as it is and also showed him the way to solve them. The same was followed and the problems got solved one by one.

          Since then, Rathnaswamy used to meet Annaswamy Thambiran quite often with Pooja offerings for Lord Murugan. One day Annaswamy Thambiran asked Rathnaswamy “Can you be my successor and continue my work for Lord Murugan?”. Rathnaswamy replied “I am a family man. How is it possible for me to do your work? I will just keep doing my services as usual”.

          As wished by Annaswamy Thambiran, Rathnaswamy started collecting donations to build a Temple. In 1865, the main sanctum sanctorium was constructed and the photo of Lord Murugan was replaced with his idol made of Blackstone. During the Temple construction work, Annaswamy attained Samadhi.

          One morning, while Rathnaswamy was opening his shop brooding over “who will take over the works done by Annaswamy”, he saw an old man in simple sanyasi dress going out of his locked shop. Rathnaswamy chased after him keeping the shop open. For a moment, the old man stopped, looked back and started running again. That is when Rathnaswamy recognized the old man as Annaswamy and continued to follow him. The old man ran towards Temple, went inside and vanished.

          Since then, Rathnaswamy took over the works of Annaswamy, giving spiritual blessings and continued building the Temple. As per Annaswamy’s guidance, Rathnaswamy went to Thiruthani and gave up his voice as offering to the lord. Thereafter Rathnaswamy never spoke a word. He was just showering the devotees with holy blessings. During his period ie Rathnaswamy’s period, “Kodambakkam Kurimedu” became known as “Vadapalani Murugan Temple”. Kodambakkam Kurimedu is at the South East corner of the main temple.

          Rathnaswamy Chose Bakyalingam as his successor and attained Samadhi in the year 1886. Sidhdhar in photo is Bakyalingam Ayya.

          The place housing the Samadhis of Annaswamy, Rathinaswamy & Bakiyalinga Swamy is the well known Sidhdhar Kovil. This is located near Valli Marriage Hall, north of Vadapalani temple on the road leading towards west from Gangai Amman temple.