About – Sadai Amma

.

Scroll down for English Version.

.
.

          கமலம்மாள் என்பவர் சென்னையைச் சேர்ந்த கொண்டித்தோப்பு அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிசெய்து வந்தார். பலகாலமாக மௌனத்தை அனுசரித்தாலும், தினசரி தன் கைகளாலேயே பூமாலை தொடுத்து வடிவுடையம்மனை அலங்கரித்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அன்னையின் அருள்நிலை உயர்ந்தது. அதேபோல் அவரது சடையும் வளர்ந்து தரையில் புரளத் தொடங்கியது. அன்னையும் சடையம்மாள் என்று அழைக்கப்பட்டார்.

          தன் ஊதியத்தை கொண்டே திருவொற்றியூர் போயிங்சாலைப் (மாட்டு மந்தை) பகுதியில் ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அவ்விடத்தில் வடிவுடையம்மன், கொடியுடையம்மன், திருவுடையம்மன் ஆகிய மூண்று தெய்வங்களுக்கும் உருவச்சிலைகளை நிறுவி, சிறிய ஆலயம் ஒன்று அமைத்து அனுதினமும் பூஜை செய்து வந்தார், அங்கேயே ஒரு சிறு அறையில் அமர்ந்து தவம் செய்து வந்தார்.

          தான் சமாதியடையும் நாள் நெருங்கியதை உணர்ந்ததும் ஆலயப் பொறுப்புகளை உடனிருந்த ஆன்ம அன்பர் ஒருவருக்கு வழங்கி விட்டு அடுத்த புரட்டாசி பௌர்னமி நாளில் தான் சமாதி அடைவதாகக் கூறினார்.

          அவ்வாறே தாயாரின் உடல் பௌர்னமியன்று ஜீவ சமாதி அடைந்தது.

.
.

          Sadayammal was working as a teacher in a school at Kondithoppu. She used to prepare and offer garlands to Vadivudai Amman daily and observe silence for a long time. Her holy spirits went on growing higher and higher and so was her long hair down to floor.

          She purchased some ground at Boeing Road @ Maattu Mandhai in Thiruvottiyur with the money she earned as a teacher. There she erected the holy Sirpas (Statues) of Vadividayamman, Kodiyudaiamman and Thiruvudayamman and constructed a small Temple. Also, she performed puja daily. She continued to meditate and undergo penance in a small room.

          When she felt approaching her last days, she entrusted the Temple works to a trustworthy person nearby and declared open Puratasi (Tamil month) Full Moon day as the day of her Samadhi. And so was Sadayammal glorified with a magnificent Samadhi.