About – Gurulinga Swamy

.

Scroll down for English Version.

.
.

          பொதுவாக சித்தர்களின் மூலத்தை அறிவது கடினம்தான் என்றாலும், குருலிங்கசாமி விருத்தாசலத்தில் பிறந்தார் என்று தெரிகிறது. அவர் எங்கெங்க்கோ சுற்றி பல கோவில்களிலும் சிவலிங்க தரிசனம் கண்டு இறுதியாக சைதாப்பேட்டை வந்தடைந்தார். அவர் மனம் பெருமைமிக்க காரனீஸ்வரனின் பலவண்ண மகிமையால் கவரப்பட்டு கோவிலுக்கு அருகிலேயே சமாதியடைய விரும்பிணார். செல்வச் சீமான் ஒருவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அதற்கான நிலம் கொஞ்சம் வேண்டும் என்று கூறினார். சீமானுக்கு மிகவும் எளிதான காரியம் இது. போகிற போக்கில் செய்யக்கூடியது. ஆனால் அவரோ “இவ்விடம் அது நடக்காது” என்று முரட்டடியாகச் சொல்லி விட்டார்.

          சிலகாலம் கடந்தது. அந்தச் சீமானின் வேலைக்காரன் ஓர் நாள் கதறிக்கொண்டு சாமிகளிடம் ஓடி வந்து “கடுமையான வயிற்றுவலியால் என் முதலாளி துடிக்கிறார். உங்கள் தெய்வீகப் பெருமைகளை இப்போதுதான் உணர்கிறார். அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று ஓலமிட்டான். அவனை கோவில் குளத்திலிருந்து நீர் எடுத்துவரச் சொன்னார் சாமிகள். அதில் கொஞ்சம் விபூதியைக் கலந்தார். “உன் முதலாளி இதைப் பருகட்டும்” என்றார். சாமிகள் அருளிய நீரை அருந்தியதும் அவர் முன்போல் தெளிவு பெற்றார்.

          சிந்தை தெளிந்த சீமான் சாமிகளிடம் ஓடிவந்தார். அவர் வேண்டிய நிலத்தைக் கொடுத்தார். சுவாமிகளின் ஜீவசமாதி காரனீஸ்வரரின் கோவிலுக்கு அருகில் விரும்பிய இடத்தில் அமைந்துள்ளது. கண்டு தரிசியுங்கள்.

.
.

          Gurulinga Swamy is believed to have been born in Virudhachalam. He visited many temples, had dharshan of Shiva Lingas and at the end landed at Saidapet. He was immensely drawn towards the magnificence of Karneeswarar and so he wanted to attain Samadhi near the temple. Swamy conveyed his wish to a wealthy person and requested him for some space. In reality it meant nothing for the rich man – he could have easily provided the land. But he brutally denied, “This cannot happen here”.

          Some days rolled by. A servant of the big guy came running to Swamy and cried, “My master is suffering from severe stomach pain. Now only he understands your divine powers. Kindly pardon him and save him”. The servant was advised to bring some water from the temple tank and he added some Viboothi. Swami advised the servant to give it to the big guy. When the holy water was taken by the rich guy, he was alright again.

          The rich man came in doubles to Swamy and offered him the place he asked for. Swamy’s Jeeva Samadhi is now at that place near the temple.